திங்கள், 6 அக்டோபர், 2008

பால்ய நகரம்


மிக நேர்த்தியான சித்திரம் போல
மனவெளிகளில் மிதக்கிறது புராதன நகரமொன்று
கோட்டுச் சித்திரங்களினாலான மண்டபத்து அறைகளில்
உன் தைலங்களின் நறுமணத்தை பரவ விடுகிறாய்
கற்றூண்களின் முதுகுகளுக்குப் பின்னால்
ஒளிந்து கொள்கிறேன்
தேடி அணைத்துப் பருகுகிறாய்
உன்னில் பாதி வயதேயான
என் பால்யத்தை
மதில்களையும் தாண்டி பிரவாகமாகிறது
நட்சத்திரங்களை உருக்கிய நதி
களைந்தவைகளுக்கு காவல் வைத்த என் பற்றிய
பிரக்ஞையற்று அதில் குளிக்கிறாய்
நதிவடிய மேலேறி வரும் மேனிபட்டுத்
தெறிக்கும் கிரணங்களில் கண்கள் நடுங்குகின்றன
கற்பனைகளில் புஜம் திரண்ட யுவனாகி
உன்னைக் காக்கும் போர்களிடுகிறேன்
ஆயிரங் குதிரைகளின்
குருதி குடித்து மீண்ட போதும்
நிதர்சனம்
வாய்ப்புகளை மறுத்து
கட்டாய பார்வையாளனாக்குகிறது உன் சுயம்வரங்களில்
ஆறுதலாய்
குவிந்த சிப்பி போன்ற வெண்மார்புகளை
பந்துகளாக்கி விளையாட கொடுக்கிறாய்
என் பால்யத்தின் கடைசி நாட்களில்.

7 கருத்துகள்:

Saravana Kumar MSK சொன்னது…

ஸ்ரீராம்.. அசத்துறீங்களே.. என்ன ஒரு கவிதை..

ரொம்ப அருமை..

உங்களையும் என் பக்கத்தில் குறித்து கொள்கிறேன்..

Saravana Kumar MSK சொன்னது…

//கற்பனைகளில் புஜம் திரண்ட யுவனாகி
உன்னைக் காக்கும் போர்களிடுகிறேன்
ஆயிரங் குதிரைகளின்
குருதி குடித்து மீண்ட போதும்
நிதர்சனம்
வாய்ப்புகளை மறுத்து
கட்டாய பார்வையாளனாக்குகிறது உன் சுயம்வரங்களில்//

கிரேட்.. சான்ஸே இல்லை..

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன்..தொடர்ந்து உங்களின் எண்ணங்களை பதிவு செய்யவும்..

ஜி சொன்னது…

கவிதைகளில் அவ்வளவு தேர்வுள்ளவனாகவில்லாதபடியால்.. மையக்கருத்து பிடிபடவில்லை... ஆனால், உங்கள் கவிதை அப்படியே காட்சிப்படுத்தி என் கற்பனைகளை நிரப்பிக் கொண்டது.. மிக நேர்த்தியான வரிகள்... கலக்குங்க :))

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

/// ஜி கூறியது...
கவிதைகளில் அவ்வளவு தேர்வுள்ளவனாகவில்லாதபடியால்.. மையக்கருத்து பிடிபடவில்லை... ஆனால், உங்கள் கவிதை அப்படியே காட்சிப்படுத்தி என் கற்பனைகளை நிரப்பிக் கொண்டது.. மிக நேர்த்தியான வரிகள்... கலக்குங்க :))///

நன்றி ஜி..உங்கள் கருத்து உற்சாகமூட்டுகிறது..

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

/// Saravana Kumar MSK கூறியது...
ஸ்ரீராம்.. அசத்துறீங்களே.. என்ன ஒரு கவிதை..

ரொம்ப அருமை..

உங்களையும் என் பக்கத்தில் குறித்து கொள்கிறேன்..///


உங்கள் பக்கத்தில் என்னையும் இணைத்துக் கொண்டமைக்கு நன்றி..


\\\\\ Saravana Kumar MSK கூறியது...
//கற்பனைகளில் புஜம் திரண்ட யுவனாகி
உன்னைக் காக்கும் போர்களிடுகிறேன்
ஆயிரங் குதிரைகளின்
குருதி குடித்து மீண்ட போதும்
நிதர்சனம்
வாய்ப்புகளை மறுத்து
கட்டாய பார்வையாளனாக்குகிறது உன் சுயம்வரங்களில்//

கிரேட்.. சான்ஸே இல்லை.. \\\\

அய்யய்யோ..எத்தன பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி????

ரமணன்... சொன்னது…

கற்பனை குதிரையை தட்டி விட்டேன் :).. என்னனமோ புரியுது.. பின்றேள் போங்கோ :)