புதன், 15 அக்டோபர், 2008

நிகு


பிற பெண்களைப் போலன்றி
உனதிரு தோள்களிலும் சிறகுகள் முளைத்ததன்
அளப்பரிய ஆனந்தத்தின் துணுக்கு
என் உதட்டோரங்களில்
உனதாடை ஜிகினாத் தூசிகளென மினுமினுத்தன
திராட்சைநிறச் செழுமையுடன் அடர்ந்திருந்த
இரவின் வெளிச்சமின்மையினூடாக
உன் உயிர்க் கலம் தளும்ப
விந்தாய் உருகினேன்
கற்பனை பழுதுபட்டு
எனது காமம் துவளுகையில்
பெருங்கருணை பாகங்களால் உணவளித்தாய்
தேவதைக் கதைகள் முடிவுறும் கணங்களை
அறியாமல் இருந்து விட்ட பின்
ஞாபகங்களைப் பின்னிழுக்கும் நிகழ்வுகளின் விசையில்
கைநீட்டி உனைத் தொட முயல்கிறேன்
கனவுகள் சூழ் உறக்கத்திலும் கூட
நிகழ்வின் முரணை முள்ளாய் வலிக்கச் செய்கிறது
நிகு நிறத்தில் எரியும் நிலவு.

1 கருத்து:

MSK / Saravana சொன்னது…

//ஞாபகங்களைப் பின்னிழுக்கும் நிகழ்வுகளின் விசையில்
கைநீட்டி உனைத் தொட முயல்கிறேன்
கனவுகள் சூழ் உறக்கத்திலும் கூட
நிகழ்வின் முரணை முள்ளாய் வலிக்கச் செய்கிறது//

பின்றீங்க ஸ்ரீராம்.. அருமையா இருக்கு..