ஞாயிறு, 19 அக்டோபர், 2008

இப்படிக்கு மூன்றாமவன்


பிரிவின் குளிர் நாவு உச்சரிக்கையில்
என் பாடலின் இறுதிவரி நடுங்குகிறது
றெக்கை முளைக்கும் உனது
அவநம்பிக்கையின் கண்ணாடித் தூசுகளால்
விழி நெய்த பருவங்களின்
மெல்லாடை கந்தலாகிறது
தாமதித்தது நியாயமற்றதெனினும் உன்
அர்ப்பணிப்பின் ரேகைகள்
என் தூரம் வரையில்
நீளவேயில்லை எந்நாளிலும்
மனமோய்ந்து
அடர்ந்த வார்த்தைக் கூட்டமாகிறேன்
என்னிலிருந்தே உருவுகிறாய் குறுவாளொன்றை
பின்னர் முன்னறியாத வரியொன்றிலிருந்து
உனது காதல் என்னிடம் சொல்கிறது
நான் மூன்றாமவனாகிவிட்டேன் என்பதை

5 கருத்துகள்:

Saravana Kumar MSK சொன்னது…

//உனது காதல் என்னிடம் சொல்கிறது
நான் மூன்றாமவனாகிவிட்டேன் என்பதை//

அருமை.. மனசை ஊடுருவி செல்கிறது..

எம்.ரிஷான் ஷெரீப் சொன்னது…

//தாமதித்தது நியாயமற்றதெனினும் உன்
அர்ப்பணிப்பின் ரேகைகள்
என் தூரம் வரையில்
நீளவேயில்லை எந்நாளிலும் //

உணர்வு பூர்வமான கவிதை.
//மனமோய்ந்து
அடர்ந்த வார்த்தைக் கூட்டமாகிறேன்//

அழகான வரிகள்..

//என்னிலிருந்தே உருகுகிறாய் குறுவாளொன்றை //

உருவுகிறாய் என வரவேண்டுமோ ?

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

அப்படித்தான் வந்திருக்க வேண்டும்.. அச்சுப்பிழை..திருத்திவிடுகிறேன்.

சுட்டிக் காட்டியதற்கு நன்றி ரிஷான்.

உமாஷக்தி சொன்னது…

அற்புதமான கவிதை வரிகள் ஸ்ரீராம். மனதை என்னவோ செய்கிறது. இதுவரை உங்கள் எழுத்துக்களை வாசித்ததில்லை, இன்று facebookக்கிலிருந்து உங்கள் ப்ளாக்கிற்கு வந்து அனைத்துக் கவிதைகளையும் வாசித்தேன். இதுவே மிகப் பிடித்த கவிதை. உங்களுடைய ப்ளாக் லேஅவுட் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

//////
உமாஷக்தி கூறியது

அற்புதமான கவிதை வரிகள் ஸ்ரீராம். மனதை என்னவோ செய்கிறது. இதுவரை உங்கள் எழுத்துக்களை வாசித்ததில்லை, இன்று facebookக்கிலிருந்து உங்கள் ப்ளாக்கிற்கு வந்து அனைத்துக் கவிதைகளையும் வாசித்தேன். இதுவே மிகப் பிடித்த கவிதை. உங்களுடைய ப்ளாக் லேஅவுட் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்!////

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உமாஷக்தி..தொடர்ந்து வலைப்பூ பக்கம் வாருங்கள்...