திங்கள், 22 செப்டம்பர், 2008

கவிதை 2


ஒவ்வொரு பகிர்தலின் பின்னும்
துல்லியமாய்க் கேட்கின்றன
அரூப மனவொலிகள்
வாதை பீடித்த மனம் பிழிந்து
வழியும் நினைவில் பாலிக்கும்
வட்ட முகச் சாயல்
கனவில் மிதக்கும் அவ்வறையின்
இருளில் தேகம் நிரம்பிப்
பூக்கும் உன் வாசம்
முற்றுப் பெறவியலாத
நினைவுகளின் மென்சதையில் அழுந்தும்
தனிமையின் கூர்முனை
துளிர்க்கும் குருதி வழிந்துறைந்து
தோல் பரப்பில் மென்சோக
நீள்வரிகள்.

2 கருத்துகள்:

Maniz சொன்னது…

good one :)

ஸ்ரீராம் பொன்ஸ் சொன்னது…

உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது மணிகண்டன்..தொடர்ந்து என் வலைப்பூவிற்கு வாருங்கள்..